Our Principal

Banner
கல்லூரி இரண்டாம் தவணை இறுதிநாள்
Monday, 04 August 2014 01:18

நமது கல்லூரியின் 2014 ஆம் வருட 2ஆம் தவணைக் கல்விச் செயற்பாடுகளின் இறுதி நாளான 02-08-2014 அன்று காலைக்கூட்டத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல், optimi certificate வழங்கல், super merit பதக்கம் அணிவித்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு தவணை இறுதியிலும் இந்நிகழ்வு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இம்முறை நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவனும், கொழும்பு Quency Distributers உரிமையாளரும், கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவரான தலப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரனுமான திரு. S. கணநாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். ஒவ்வொரு தவணைப் பரீட்சையிலும் 75 உம் அதற்கு மேல் சராசரி எடுத்த மாணவர்கள் optimi certificate வழங்கப்பட்டும், 90 உம் அதற்கு மேல் சராசரி எடுத்த மாணவர்கள் super merit என்ற கௌரவப் பதக்கம் அணிவிக்கப்பட்டும் பாராட்டப்படுகின்றனர்.

 

 

 
2014 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை விடைத்தாள் பார்வையிட வருகை தந்த பெற்றோர்
Thursday, 31 July 2014 00:00

 
கல்லூரியின் சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் அலங்கார வளைவிற்கான அத்திவாரமிடலும்
Wednesday, 30 July 2014 00:00

கல்லூரியின் முன்னால் உள்ள பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கல்லூரியின் பழைய மாணவரும் சிலையை ஸ்தாபிப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பைச் செய்தவருமான சுவிஸ்நாதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் 28.07.2014 மு.ப 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அவருடன் யாழ்மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரும் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுவிஸ்நாதன் அவர்களால் கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்படவிருக்கும் அலங்காரவளைவிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக விருந்தினர்கள், கல்லூரியின் மாணவதலைவர்கள், கல்லூரியின் பான்ட் இசைக்குழு ஆகியோரால் மணற்காட்டு அம்மன் கோயிலில் நடந்த விசேட பூசையைத் தொடர்ந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இறுதியாக கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபர் தனது தலைமை உரையில் கல்லூரியின் பழைய மாணவரும் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய சுவிஸ்நாதன் அவர்கள் கல்லூரி அன்னைக்கு ஆற்றிவரும் சேவையை மனதாரப் பாராட்டினார்.

அவரின் குறிப்பிடத்தக்க சேவைகளான கணினிஆய்வு கூடத்தின் அபிவிருத்தி வேலைகள் ஏழைமாணவருக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டி அன்னை சரஸ்வதிக்கு சிலை அமைத்தமைக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
கல்லூரியின் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கும் அதிபர் தனது நன்றி உரையில் குறிப்பிட்டார்.
இதனைக் கௌரவிக்கும் முகமாக கல்லூரி அதிபர் அவர்கள், சுவிஸ் நாதன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் கல்லூரியுடன் தொடர்புகளை மேற்கொண்டு இச்சேவைகளை வழங்கி உதவி அளிக்கும் பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் அவர்களையும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் அவர்களையும் அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினர் பிராந்திய பொலிஸ்மா அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு.சிற்சபேசன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் ஆகியோரின் உரைகளுடன் விழா இனிதே நிறைவேறியது.

Read more...
 
கல்லூரியில் 2013 ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பாராட்டு வைபவம் மற்றும் நன்கொடையாளிகளை கௌரவிக்கும் வைபவம்
Sunday, 22 June 2014 00:19

கல்லூரியில் 2013 ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பாராட்டு வைபவம் மற்றும் நன்கொடையாளிகளை கௌரவிக்கும் வைபவம் 2014-.6-13 ம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 7.30 மணிக்கு காலைக்கூட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றன.
முதலில் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான நன்கொடையாளர் திரு.சிவகுரு கந்தையா( மதவாச்சி கந்தையா) அவர்கள் நன்றி பாராட்டி பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டார்.
அடுத்து பிரதான மண்டபத்தில் மாணவர்கள் இருப்பதற்கான 350 கதிரைகளையும் 5 கணினிகளையும் வழங்கிய காரைநகர் சிதம்பரா மூர்த்தி கேணியடியைச் சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசிப்பவரும் திரு.செல்வராசா சேனாதிராசா அவர்களின் தாயார் திருமதி இராசம்மா செல்வராசா அவர்கள் அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கதிரைகள் மற்றும் கணினிகளை கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.இதற்கு நன்றி பாராட்டும் முகமாக சேனாதிராசா அவர்களின் தாயார் திருமதி இராசம்மா செல்வராசா அவர்களும் அவர் மகன் சிவசோதி மருமகள் கெங்கா சிவகுமார் ஆகியோருக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தது மட்டுமன்றி அவர்களுக்கு பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரிக்கு என்றும் தனது பங்களிப்புக்களையும் நன்கொடைகளையும் செய்து வரும் கொழும்பு Quancy distributers உரிமையாளரும் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு(தலைப்பா) கணபதிப்பிள்ளை அவர்களின் பேரன் கணநாதன் (நாதன்) அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து அவருக்கும் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார்.
அதிபர் தனது உரையில் பிரதான மண்டபத்தில் மாணவர்கள் நிலத்தில் இருப்பதைத் தவிர்த்து கதிரைகளில் இருப்பதற்கு 350 கதிரைகளையும் 5 கணினிகளையும் வழங்கிய லண்டனில் வசிக்கும் திரு.செல்வராசா சேனாதிராசா அவர்களுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது உரையில் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு Quancy distributers உரிமையாளருமான கணநாதன் அவர்களின் சேவையை நன்றியுடன் பாராட்டினார்.
கல்லூரியின் மூத்த பழைய மாணவன் திரு சிவகுரு கந்தையா கல்லூரிக்கு வழங்கிய சேவைகளையும் அதிபர் நன்றி பாராட்டினார்.
மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களை வழங்கி உதவிய தற்போது கனடாவில் வசிக்கும் வாரிவளவு கந்தையா கணேசன் (தேர்க்கார) அவர்களுக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கணினி ஆய்வு கூடத்தை அபிவிருத்தி செய்ய உதவி செய்துகொண்டிருக்கும் திரு சுப்பிரமணியம்  கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்கள், கனடா காரை கலாச்சார மன்றம், லண்டன் காரை நலன்புரிச்சங்கம் ஆகியோர்களையும் அதிபர் நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
க.பொ.த (சா/த) மாணவர்களைக்கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்க தனது பங்களிப்பை வழங்கிய திரு.செ. சேனாதிராசா அவர்களுக்கு மேலும் நன்றிகளைத்தெரிவித்தார். மாணவர்களுக்கான பாராட்டு விழாவுடன் நிகழ்வுகள் மு.ப 9.00 மணிக்கு நிறைவுபெற்றன.

 
உயர்தர மாணவர் மன்ற ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும்
Thursday, 12 June 2014 16:43

கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் 08.06.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத்தலைவர் செல்வன்.த.யசோதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக சங்கானைப்பிரதேச செயலாளர் திரு.அ.சோதிநாதன் (Yarltonian) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப்பணிமனைப் கணக்காளர் திருமதி கவிதா சாந்திநாயகம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக Alliancz பிராந்திய முகாமையாளர் G. ஸ்ரீவரதன் (Yarltonian)  அவர்களும் தீவக வலயக்கல்விப்பணிமனை நிர்வாக உததியோகத்தர் திரு.S.சற்குணராசா (Yarltonian) அவர்களும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், அயல்பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 

 
தீவக வலய மட்டத்திலான கணிதப் புதிர்ப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முன்னணியில்
Sunday, 01 June 2014 11:28

2014ம் ஆண்டு கணிதப் புதிர்ப் போட்டியில் தீவக வலய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 10 இடங்களைத் தக்கவைத்து( அதிகூடிய) முன்னணியில் நிற்கின்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், போட்டிக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திரு. செ. அருள்செல்வம், திரு. ஆ. யோகலிங்கம், செல்வி. பா. சர்மிளா ஆகியோரையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

வகுப்பு
முழுப்பெயர் நிலை
6 தியாகராசா சசிகரன்
1
7 சிவராயு ஜனுசன்
1
7 ஆனந்தராசா பேபிசாமினி
3
8 சக்திவாசன் லக்சன்
3
9 லோகேஸ்வரன் குருபரன்
4
10 சிவகுமார் நவநீதன்
3
10 சுரேஸ்குமார் கஜந்தன்
4
11 குகநேசன் கோபிதா
1
11 தியாகராசா சயந்தன் 2
11 மோகநாதன் துர்சிகா 4

 

முதல் 3 இடங்களையும் பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகினர்.

 
« StartPrev12345678910NextEnd »

Page 1 of 15


Powered by Joomla!.